இனியொரு விதி செய்வோம் & கானக்குயில் 2024

அன்புடன் வணக்கம்!

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் சூரிச் மாநிலத்தில் வாழும் எமது கலைஞர்களின் திறமைகளை மென்மேலும் ஊக்குவித்து மதிப்பளிக்கவும், அவ் கலைஞர்களின் கலைத்திறமையை வெளிக்கொணரும் ஒரு மேடையாகவும், மாநில வாழ் தமிழ் உறவுகளை ஒருங்கிணைத்து அவர்களுடன் தமிழ்த்தேசியம் சார்ந்த நெருங்கிய தொடர்ச்சியான தொடர்பாடல்களைப் பேணுவதனையும் நோக்காகக் கொண்டு "இனியொரு விதி செய்வோம்" பல்சுவை நிகழ்வு 2016ம் ஆண்டு தோற்றம் பெற்றது.

தமிழீழ விடுதலை சார்ந்த எழுச்சிப்பாடல்களை மழுங்கடிக்க முனைபவர்களின் சதித்திட்டங்களை முறியடிக்கவும், தற்போதைய காலத்தின் தேவை கருதியும் இனியொரு விதி செய்வோம் என்கின்ற பல்சுவை நிகழ்வில் தற்போதைய காலத்திற்கும் ஏற்ற வகையில் கரோக்கே ரீதியிலான தமிழீழ எழுச்சிப்பாடற் போட்டியான "கானக்குயில்" உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் சுவிஸ் தழுவிய போட்டி நிகழ்வாக இருந்தாலும் 2020ம் ஆண்டிலிருந்து ஐரோப்பா ரீதியில் நடாத்துமளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய உணர்வோடு நடாத்தப்படவுள்ள இவ் நிகழ்வுகளில் தேசியப்பற்றுடனும், தமிழீழ சிந்தனையுடனும், போட்டி விதிமுறைகளுக்கு அமைவாக தாங்கள் பங்குபெறுவதோடு; தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கும் இவ் விபரண்களைத் தெரியப்படுத்தி அவர்களும் போட்டியில் பங்குபெற ஊக்குவிப்புக்களை வழங்கும் வண்ணம் வேண்டிக்கொள்வதோடு இவ் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற தங்களின் புரிந்துணர்வு மிக்க ஒத்துழைப்புக்களும், நல் ஆலோசனைகளும் துணைநிற்கும் என்று உறுதியாக நம்புகின்றோம்.

மேலதிக தொடர்புகட்கு:
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - சூரிச் மாநிலம்
078 658 08 31 / 078 889 51 40 / 076 330 11 27

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"
நன்றி
நிகழ்வு ஏற்பாட்டுக்குழு.
17.10.2019